Wednesday, 20 August 2014

பாசம்.... இனி மெல்லச் சாகும்!

மனிதன் நாகரீக வளர்ச்சி கண்டவன்பண்பாடு நிறையக்கற்றவன்
மொழி என்னும் ஆளுமை பெற்றவன்
இலக்கண இலக்கியம் பிரித்துப்பொருள் உணர்ந்துச் சங்கம் எல்லாம் 
வளர்த்தவன்அன்பு சமைத்தவன்
அவனுக்கென்று கொள்கை வைத்தவன்அதற்குச் சிகரம் வைத்தார் போல் சமயம் படைத்தவன்
அப்பப்பாஅறிவியல்கணிதபூலோகவானசாஸ்திர முன்னேற்றம்
கண்டு நிலவுக்கே சென்று வந்தவன்

இவ்வளவு முன்னேற்றம் கண்ட அவனுக்குள் போராட்டம் எப்போதுமே! பாசமிழந்துப் பணம் அடைவதா? இல்லை, பணம்தொலைத்துப் பாசமாய் வாழ்வதா?

குடும்பம் பிரிந்து வாழ்ந்தாலும் பாசமாய் இருக்கும் மனிதர்கள் உண்டு; இங்கே பணம் ஒருபொருட்டு அல்ல! ஒரே வீட்டில் இருந்தும் பாசம் என்றால் என்ன? என்று வினவும் மனிதர்களும் இங்கு உண்டு; இங்கே பணம் மட்டுமே பொருட்டு!

மனிதனின் மனம் மிகச் சிறந்த கருவி. அது சுற்றுச் சூழலைப் படம் பிடித்து அதை அப்படியே கிரகித்துக் கொள்ளும் சக்திபடைத்தது; இந்தக் காலம் எப்படி நகர்கிறது என்று பலருக்கும் தெரியும். பெரும்பாலோர் மனத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டுவிட்டதாய் நான் உணர்கிறேன். அதை வைத்தே இந்தத் தலைப்பு! அடிப்படையை விளக்கினாலே நம் அனைவருக்கும் புரிந்துவிடும். வாருங்கள், அடிப்படையைக் காணுவோம்!

ஒரு குழந்தைக்குத் தாய்ப் பாசம் எப்படித் தெரியும்? அவள் தன் குருதியைத் தூயநிறத்தினதாய் வெளுத்துப் பாலூட்டுகிறாள்; பாசம் கலந்துச் சோறு ஊட்டுகிறாள்; வெப்பம் பொறுக்க நீராட்டுகிறாள்; தலை வாரிப் பூச் சூட்டுகிறாள்; முழு நிலவுகாட்டுகிறாள்; அள்ளி அனைத்து, ஆடை அணிவித்து மகிழ்கிறாள்.... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அவள் அந்தக்குழந்தைக்காகவே வாழ்கிறாள் என்றாலும் மிகை இல்லை. பாசத்திற்கு விதை இவைகளெல்லாம்!
சமீபக் காலம் எப்படி? தாயும் வேலைக்குச் செல்கிறாள், பணம் படைப்பதற்காக! பாலூட்டினால் அழகுக் குறைந்து விடும் என்று எவனோ சொல்லிவிட்டான் மூடன், அங்கே பால் ஊட்டுவது நிறுத்தப்பட்டது. சோறு ஊட்டுவதற்கு நேரம் இல்லை, ஆயாக்கள் இருந்தால் என்று நினைத்த பொழுதேயொரு ஆயா வந்துவிட்டாள், பாட்டியின் வடிவில்! அவளே நீராட்டவும் செய்வாள் என்றால் மட்டற்ற மகிழ்ச்சி. அள்ளி அனைத்து மகிழ்வதற்குக் கூட நேரம் இல்லை என்றும் சொல்வதற்கு இல்லை.... அள்ளி அனைக்கும் கலாசாரமே மறந்துப் போயிற்று இங்கே! பணம் பின்னர்ப் பறக்கும் சமுதாயமாய் மாறிய அவலம்! "பணம் பந்தியிலே, மனம்குப்பையிலே" என்ற வாசகம் நிலைத்து ஓங்குகிறது நம் வாழ்வில்! பணத்தை விதைக்கிறோம், பொருள் வளர்கிறது; பழக்கவழக்கம் தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கிறோம். இங்கே பாசம் செத்துபோகவில்லை... ஏனெனிலது உயிர் பெறவேஇல்லையே, பிறகு தானே செத்துப் போவதற்கு!

உலகம் பணமே பிரதானம் என்று சுழலும் வரை, பொருள் சேர்க்கும் கலாசாரம் பெருகும் வரை, தாய்த் தன் குழந்தையை அள்ளி அனைக்காதவரை, தந்தை தன் குழந்தைக்கு நல்லறிவுபுகட்டாதவரை..... பணமே வெல்லும்!

பாசம் இனி மெல்லச் சாகும்!!!


"தீது நன்மை எல்லாம் காளிதெய்வ லீலை யன்றோ?" அன்றே சொல்லிவிட்டான் எங்கள் அமரகவி!