இந்தத்தலைமுறை வேகம் நிறைந்தது…. அதன் மூலம் அது இழந்தது என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்துபார்த்ததுண்டா?
நான் சிறு வயதில் செங்கோட்டை செல்லும் ரயில் வண்டியில் கும்பகோணம் செல்லும் போது, அதன் அழகை ரசித்திருக்கிறேன்….அது சென்னையிலிருந்து கும்பகோணம் செல்வதற்கு பத்து, பன்னிரண்டு மணி நேரங்கள் ஆகும்… அனைத்து நிறுத்தங்களிலும் ஓரிரு மணித்துளிகள் நின்று செல்லும். ஒவ்வொரு ஊரின் அழகை, வெளித்தோற்றத்தை அந்த நிறுத்தத்தின் போது நீங்கள் கண்டு களிக்கலாம். ஆலமரம் நிறைந்து காணப்படும் நம் பூமி, நமது விசாலமான மனதைக்காட்டுவதாய் நினைத்துக்கொள்வேன். சுமந்து செல்லும் போர்ட்டர்களை காணும் போது நம் உழைப்பு தான் நமக்கு சோறுபோடும் என்பதை உணர்வேன். அங்கே விற்கப்படும் பலா சுளைகள், நம் வாழ்வின் இனிமையை எடுத்துக்காட்டும் துண்டுகளை உணர்வேன். வண்டி புறப்பட எழுப்பும் மணியின் ஓசை, ஒரு ரீங்காரம்!!! அது நமது கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு!!!
இவை அனைத்தும் இன்று சாத்தியமா? காலம் நகர்வதை ரசித்த நாம், இன்று காலம் தொலைகிறது என்ற கவலையால், நம் வாழ்கையை துரிதப்படுத்தும் நோக்கத்தில் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்!!!
இன்று என் மகன் விரைவு வண்டியின் குளிர் பெட்டியில், வெளியே ஒளியின் சிதரலினிடயில் சிலிர்த்து கிடக்கும் நாணலின் அழகைக்கூட ரசிக்கும் திறன் இழந்து கும்பகோணம் அடைகிறான் வேகமாக, அதி வேகமாக!!! ஒரு கைபேசி இருந்தால் போதும் அவனுக்கு!!!
“உலகம் உங்கள் கையில் அடக்கம் என்று சொன்னவன், அதன் அழகை சொல்ல மறந்தான் போலும்!!!”
“அவன் அவன் காலம் தொலைந்து கொண்டிருக்கிறது என்ற கவலையில் சுழன்றுகொண்டிருக்கும் போது, இந்த தலைமுறை தரம்குறைந்த “சினிமா எல்லாம் ஒரு பொழுது போக்கு” என்று சொல்வதைக்கேட்கும்போதே எனக்கு வயிற்றுப்போக்கு உண்டாகிறது!!! நான் சினிமாவுக்கு எதிரியல்ல…. நல்ல சினிமாவை நான் என்றும் வரவேற்கிறேன்… இந்த தலைமுறை நம் சினிமா சரித்திரம் தெரியாமல் சிவாஜி கணேசன் எல்லாம் ஓவர்-அக்டிங் (over-acting), குடும்ப படங்கள் எல்லாம் போர் (Bore) என்று சொல்லும்போது என் இதயம் வெடித்துச்சிதறுகிறது!!! நான் கேட்கிறேன் அவர்களின் மொழியில், “Why this Kolaveri?”…. தனுஷ் “Kolaveri” ரசனை தவறில்லை, ஆனால் நீங்கள் சிவாஜி-யை ரசிக்காவிட்டாலும், குறைகூறாதீர்கள்!!!
"விதை இல்லாமல், விழுதுகள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் அன்பு மணிகளே!!!"
இது எனக்கு அச்சத்தைத்தருகிறது…. இனி வரும் தலைமுறை வாழ்கையை தொலைத்து விடுமோ என்ற அச்சத்தை!!! ஆதலால் இந்த தலைமுறை வாழ்கையைத்தொலைக்காத வேகம் கொண்டு, தனக்குள் ரசனை வளர்த்துக்கொள்ள தங்களின் பங்கு என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டுகிறேன்!!!
Microsoft Windows தெரிந்து கொள்வதில் தவறு இல்லை, ஆனால் உங்கள் வீட்டின் ஜன்னலின் அழகை ரசிக்க முதலில் கற்றுகொள்ளுங்கள்…
Angry Birds தவறில்லை, வீட்டினருகே “ஒரு பறவையும் இல்லையே, அதன் ஓசை கேட்கவில்லையே, எங்கே சென்றது இவை எல்லாம் நம் இனப்பெருக்கத்தினால்!!!” என்று சிந்திக்க முயற்சிசெய்யுங்கள்!!!
E-mail தவறில்லை, ஆனால் ஒரு முறையாவது உங்கள் அன்பு நண்பருக்கோ, அன்பு தங்கைக்கோ, அன்பு உறவினருக்கோ தபால் கடிதம் எழுதி அனுப்பிப் பாருங்கள்!!!
முகம் தெரியாத மக்களெல்லாம் நண்பர்கள் என்பது ஒரு அவலம், அதுவும் முகப்புத்தகத்தில் (Facebook)!!! அவர்களுக்காக மணிக்கணக்கில் பொழுதை வீண் செய்வதைத்தவிர்த்து, ஒரு சில மணித்துளிகள் உண்மையான நட்பு பாராட்டி, அவர்களை வீட்டிற்க்கு அழைத்து அவர்களுக்கு விருந்தோம்பல் செய்து தான் பாருங்களேன்!!! “விருந்தோம்பல் என்றால் என்ன” என்று கேட்கிறீர்களா? உங்கள் வீட்டு பெரியவர்களிடன் கேட்டு தெளியுங்கள்!!!

“உங்களால் முடியும், பாச மலர்களே!!”
“ஒரு பட்டாம்பூச்சியை ரசிக்க நீங்கள் பூங்காவுக்குத்தான் செல்லவேண்டும்… அதற்கு முதலில் நீங்கள் பூங்கா செல்லும் மனநிலையை வளர்க்க வேண்டும்”
No comments:
Post a Comment