Thursday, 31 July 2014

அன்பென்று கொட்டு முரசே!

உலகத்தையே ஆட்டிப்படைக்கக்கூடிய ஆயுதம் என்ற ஒன்று உண்டு என்றால் அதுஅன்புதான்! அதைத்தன்வசம் வைத்திருக்கும் மனிதர்களைப்பலவீனமாக கருதும் ஒரு பிரிவு தான் உண்மையில் பலவீனமானவர்கள் என்ற கருத்தை முதலில் பதிவு செய்து இந்தக் களம் கண்டு தீட்டுகிறேன்.

நம் வீட்டிலிருந்தே தொடங்குவோம். உங்கள் மழலை செல்வங்களை நீங்கள் எப்படி வழி நடத்துகிறீர்கள்? அவர்கள் இந்த ப்ரபஞ்சத்தைப்பார்க்கும் பார்வை உங்களிடமே தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களின் மனதில் பதிவாகிறது. நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் அவர்களுக்கு சரியாகவே தோன்றும். நீங்கள் எதில் நேரத்தைச்செலவிடுகிறீர்களோ, அதிலேயே நேரத்தைச்செலவிட அவர்களும் விரும்புவார்கள். மொத்தத்தில் உங்களின் பிம்பமாகவே அவர்கள் வளர்வது உங்களுக்கு தெரிகிறதா?
குழந்தைகள் முன்னே ஒரு பொருள் உன்னது, என்னது என்று பேசுவதைத்தவிருங்கள். இங்கிருந்து தான் பல நினைவலைகள், தவறான சிந்தனைகள் உருவாகின்றது! எந்த ஒரு பொருளும் நாம் உபயோகப்படுத்துவதற்காக தான். ஆதலால், இந்த பொருள் நாம்உபயோகப்படுத்துவதற்காக தான்என்று கூறிப்பழகுங்கள்
வாழ்வின் உறவுகள் மட்டுமே நம்முடையது!!! நமக்கு மட்டுமே!!! அதனால் தான் அதனை நம்சொந்தம்என்று சொல்கிறோம்!!!
குழந்தைகளை அதட்டாதீர்கள், அடிக்காதீர்கள்அதை அப்படியே உங்களுக்கு அது செய்து காட்டிவிடும் பெரியோர் நிறைந்த சபையில்!!! உங்கள் வளர்ப்பு ஒரு நொடியில் வெளிச்சம் ஏறிவிடும், கவனமாக இருங்கள்!!! கனிவு, பணிவு, துணிவு, கருணை….இவை அனைத்தையும் கற்றுக்கொடுங்கள், வெறும் வார்த்தைகளால் அல்ல! அன்பு கலந்த உங்கள் செயல்களின் மூலம்!!!
இங்கே அன்பின் பலம் நம் வீட்டு சமுதாயத்தில் பெரும் பங்கினை வகிக்கிறது என்பதை உணர்கிறீர்களா?

நம் அடுத்த இலக்கு, அலுவலகம். இது பலவிதமான மக்கள் ஒன்று கூடி உழைத்து முன்னேறும் ஒரு தளம். இந்தத்தளத்தில் முன்னேற்றம் மட்டுமே இலக்கு என்று பயனப்படுவோர் ஏராளம். இதைக்குறை கூறுவதற்கில்லை ஏனெனில் காலத்தின் கட்டாயம் அப்படி!!! காலத்தை குறை கூறுவது தானே மனித இயல்பாகி விட்டது! இங்கேயும் அப்படியே! முன்னேற்றத்தைத்தனி ஒரு மனிதனாக நாம் செய்துவிடுவது சாத்தியமல்ல! நாம் முன்னேறிவிட்டோம் என்று நமக்கு தெரிவிப்பதர்க்குக்கூட நமக்கு ஒருவன் தேவைப்படுகிறான். அப்படி இருக்க, நம் முன்னேற்றத்திற்கான பாதை அமைத்தவன், தோள் கொடுத்தவன், சரியும் முன்னர் சாய்ந்து பிடித்தவன், இப்படிப் பலர் இருக்கிறார்கள். … இவர்களின் முன்னேற்றத்தில் நமது பங்கு என்ன? அனைவரையும் மறந்து ஓடும் ஓட்டத்தில் நாட்டம் உடையவரா நீங்கள்? இல்லை, பங்கு என்ன என்று சிந்திக்கும் சிந்தனை செல்வம் உங்களுக்குள் கிடக்கிறதா? அந்தச்சிந்தனையே அன்பின் அடையாளம் என்று நான் கூறுவேன்!!! ஒரு குழந்தைக்கு எப்படி வீட்டினில் தாயும், தந்தையும் முன்னோடிகளோ, அப்படியே ஒரு அலுவலகத்தில் முதலாளி, மற்ற தொழிலாளிகளுக்கு முன்னோடியாகத்திகழ்கிறார்ஒரு மேலாளர் தன் மக்களை எப்படி வழி நடத்துகிறாரோ, அதன் வழியே மக்கள் செல்ல நேற்படுகிறதுகாலை வந்து கடிந்து கொள்வதன் மூலம், மாலை மங்கும் வரை மறையாத சோகம் சூழ்ந்து காணப்படும்!!! உங்கள் மீது பயம் ஏற்படும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள், மரியாதை ஏற்படும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள்மக்களை அன்பு வழி நடத்தும் பக்குவத்தை ஒருவர் பெறும்போது தான் அவர் அனைவருக்கும் மேலாளர் ஆகிறார், மக்கள் அவரை ஒரு முன்னோடியாக கருதுவர், ஒன்று கூடி செயல் படும் திறன் அதிகரிக்கும், ஒருவர் மற்றவரை போற்றும் கலாசாரம் பெருகும், அங்கே ஒரு சமநிலை உருவாகும்.. அனைவருக்கும் நம்பிக்கை என்னும் சக்தி பிறக்கும்!!! இங்கேயும் சிறந்த சமுகத்தை உருவாக்கும் விதையாக அன்பு தான் இருந்திருக்கிறது!!! அலுவலகத்தில் அன்பை விதைத்துப்பாருங்கள்..அன்பிற்சிறந்த ஆலமரம் வேறில்லைஉங்களுக்கு பலம் சேர்க்கும் விழுதுகளாய் மக்களை உருவாக்குங்கள், பாசம் என்னும் நீர் ஊற்றி! ஒவ்வொரு விழுதும் ஒரு ஆலமரம், அன்பின் தோட்டத்தில்!!!

நிறைவாக சமுதாயம்நம்மில் பலரின் அன்பை பரீட்சை செய்துவிடும் இந்த சமுதாயம்ஏனெனில் சமுதாயம் என்னும் பெரும்வட்டத்தில் நாம் அனைவரும் ஒரு புள்ளியே, சில பெரும் புள்ளிகளைத்தவிர!!! இதை விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை, இந்தச் சோதனை நிறைந்த களத்தில் தான் சிலர் அன்பின் வழியில் தனக்கென ஒரு பாதை அமைத்து, தனக்கென ஒருசமயத்தைஉருவாக்கி உள்ளனர் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!!!!! அன்பானவர்களைப்பார்த்தீர்களானால் அவர்கள் முகத்தில் எப்போதும் ஒரு புன்முறுவல் பூத்திருக்கும். அவர்கள் உதட்டின் வழியே தூய வார்த்தைகள் மட்டுமே வெளிப்படும். அவர்களின் கண் பொய் பேசாது. அவர்களின் மனம் நல்லதையே நாடும். உள்ளொன்று வைத்துப்புரம் ஒன்று பேசும் வித்தை எல்லாம் தெரியாது. மொத்தத்தில் பாரதியின் வரியில் சொல்லவேண்டும் என்றால்நேர்பட பேசும் நல்மனிதர்கள்!!!
அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்என்றார் ஏசுபிரான். “அனைத்து ஜீவராசிகளிடத்தும் அன்பு கூறுங்கள்என்றார் சித்தார்த்தன் எனும் புத்தபிரான். “பகைவருக்கும் அன்பு அருளினான்ராமபிரான். “அன்பென்று கொட்டு முரசேஎன்றான் அமரகவி பாரதி.
இவர்கள் வாழ்ந்து காட்டிய உதாரணங்கள்

இனியாவது சில்லரைத்தனமாய், சிடுமூஞ்சித்தனமாய், சிதைந்து போகாமல்…, சாதிக்கபுறப்படுங்கள் இன்முகம் கொண்டு, அன்பென்னும் ஆயுதம் கொண்டு!!!

நாளைய உலகம் கூறட்டும் பலம் எது, பலவீனம் எது என்று!!!

No comments:

Post a Comment